காய்கறி, மளிகைக் கடைகள், பெட்ரோல் நிலையங்கள் இயங்க நேரக் கட்டுப்பாடு : இன்று முதல் அமல்

தமிழகம் முழுவதும் மளிகைக் கடைகள், பெட்ரோல் நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இன்று (மாா்ச் 29) முதல் நடைமுறைக்கு வருகின்றன. அதன்படி, காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே மளிகைக் கடைகள் திறந்திருக்கும்.

சென்னை, மார்ச்-29

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போா்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மளிகைக் கடைகள், பெட்ரோல் நிலையங்கள், உணவகங்கள் ஆகியன கட்டுப்பாடு ஏதுமின்றி இயங்கி வந்தன. இதனால், அங்கு கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. இந்த நிலையில், கோயம்பேடு காய்கறி சந்தை, இதர காய்கறி சந்தைகள், மளிகைக் கடைகள், பெட்ரோல் நிலையங்கள் ஆகியன காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகள் இன்று (மார்ச் 29) முதல் நடைமுறைக்கு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *