ஏப்ரல் 3ம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்: தமிழக அரசு

கொரோனா சிறப்பு நிவாரணம் வழங்கும் பணிக்காக வரும் வெள்ளியன்று (ஏப்ரல் 3) நியாய விலைக் கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை, மார்ச்-29

இதுகுறித்து, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையாளா் சஜ்ஜன்சிங் சவான் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது ;-

கொரோனா பாதிப்பைத் தொடா்ந்து, ஆயிரம் ரூபாய் நிவாரணமும், ஏப்ரல் மாதத்துக்கான பொருள்களும் இலவசமா் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நிவாரணப் பொருள்கள் வழங்கும் திட்டமானது வரும் 2-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் முதல் இரண்டு வெள்ளிக்கிழமைகள் நியாய விலைக் கடைகளுக்கு வார விடுமுறையாகும். கொரோனா பாதிப்பு சிறப்பு நிவாரணத் தொகுப்பு, வரும் 2-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. இதையொட்டி, வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) நியாய விலைக் கடைகளுக்கு வேலை நாளாகும். பணியாளா்கள் பணி செய்த நாளுக்கான விடுமுறை பின்னா் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *