சுய கட்டுப்பாடுடன் இருந்து கொரோனாவை வெல்ல வேண்டும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஊரடங்கு காலத்தில் மக்கள் தொடர்ந்து சுய கட்டுப்பாடுடன் இருந்து கொரோனாவை வெல்ல வேண்டும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

கோவை, மார்ச்-28

கோவை மாவட்டத்தில் #COVID19 பரவுதலை தடுப்பது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி, அடுத்து எடுக்கப்பட வேண்டிய தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த இன்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வேலுமணி, தூய்மை பணியாளர்களுக்கான இரட்டை ஊதியம், ஒப்பந்த ஊழியர்களுக்கும் பொருந்தும்.பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், #COVID19 தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன.இன்று கோவையில் அஇஅதிமுக மாவட்ட கழகத்தின் சார்பாக #COVID19 நிவாரணமாக ரூ. 25 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினேன்.மேலும், தூய்மை பணியாளர்களுக்கு தேவையான முக கவசங்கள், கை கவசங்கள் என பல்வேறு பொருட்களை வழங்கி, தூய்மை பணியாளர்களை பாராட்டினேன்.ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் மக்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின்-சி அதிகமுள்ள உணவு வகைகளை உட்கொள்ளலாம்.
மேலும், ஊரடங்கு காலத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.இருப்பினும் மக்கள் தொடர்ந்து சுய கட்டுப்பாடுடன் இருந்து கொரோனாவை வெல்ல வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *