டெல்லியில் பரபரப்பு – கொரோனாவை அலட்சியப்படுத்தி பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்

டெல்லியில் இருந்து சொந்த ஊர் செல்வதற்காக ஏராளமான தொழிலாளர்கள் பேருந்து நிலையத்தில் குவிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி, மார்ச்-28

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. தினசரி வேலை பார்த்து சம்பாதிக்கும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர்.
முக்கியமாக டெல்லியில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.டெல்லியில் குடியேறி இருக்கும் பிற மாநில மக்கள் தங்கள் வேலையை இழக்கும் நிலைக்கு சென்றுள்ளனர்.

இதனால் டெல்லியில் இருந்து ஆயிரக்கணக்கில் மக்கள் வெளியேறி வருகிறார்கள்.

தங்கள் குழந்தைகள், மனைவிகளுடன் இளைஞர்கள் பலர் சாரை சாரையாக வெளியேறி வருகிறார்கள். முக்கியமாக டெல்லியில் இருந்து உத்தர பிரதேசத்தில் உள்ள தங்கள் சொந்த ஊர் நோக்கி நேற்று மக்கள் படையெடுத்து சென்றனர். டெல்லியில் கடைகள், பணிகள் இல்லாததால் கூட்டம் கூட்டமாக இவர்கள் வெளியேறி வருகிறார்கள். டெல்லியில் மூட்டை தூக்குவது, ரிக்சா ஓட்டுவது, கட்டுமான பணிகளை செய்வது,வீட்டு வேலைகளை பார்ப்பது, மெட்ரோ பணிகளை மேற்கொள்வது என்று பல பணிகளை மேற்கொள்கிறார்கள். ஆனால் ஊரடங்கு காரணமாக இந்த பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக மக்கள் கால் நடையாக பயணம் மேற்கொண்டனர். தினமும் 50 ஆயிரம் பேர் வீதம் இப்படி டெல்லி நோக்கி கால் நடையாக செல்கிறார்கள். நேற்று மட்டும் 60 ஆயிரம் பேர் வரை டெல்லியில் இருந்து உத்தர பிரதேசம் நோக்கி கால் நடையாக சென்றனர். இன்றும் மக்கள் பலர் இப்படி சென்றனர். இந்த நிலையில் இன்று டெல்லியில் ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் இருந்து உத்தர பிரதேசம் நோக்கி இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் வெளியேறிய இந்த வீடியோ பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் உணவு, வேலை இல்லாததால் இவர்கள் இப்படி வெளியேறுகிறார்கள். அங்கு நேற்று இப்படி கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்களை டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சந்தித்து பேசினார். ஆனாலும் இவர்கள் தொடர்ந்து உத்தர பிரதேசம் நோக்கி கிளம்பி செல்கிறார்கள்.

கொரோனா என்பது தொடுதல் மூலம் பரவ கூடியது. கொரோனா காரணமாக டெல்லியில் 41 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் மக்கள் இப்படி கூட்டம் கூட்டமாக வெளியே செல்வது பெரிய ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மக்கள் இடையே இதனால் கொரோனா பரவ வாய்ப்புள்ளது. மக்கள் இப்படி ஆபத்தை உணராமல் கூட்டம் கூட்டமாக செல்வது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், னெல்லியில் இருந்து இடம்பெயரும் தொழிலாளர்கள், டெல்லியிலேயே இருக்குமாறு வலியுறுத்தினார். மேலும், 800 பகுதிகளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்காக மதிய உணவு மற்றும் இரவு உணவை அரசு வழங்குவதாகக் குறிப்பிட்ட அவர், தொழிலாளர்கள் தில்லியில் இருந்து கிளம்புவதன்மூலம், ஊரடங்கின் நோக்கமே அர்த்தமற்றதாகிவிடும் என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *