கேரளா, தெலுங்கானாவில் கொரோனாவுக்கு முதல்முறையாக ஒருவர் பலி!

கேரளாவை தொடர்ந்து தெலுங்கானாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முதன் முறையாக ஒருவர் பலியாகி உள்ளார்.

ஐதராபாத், மார்ச்-28

கொரோனா வைரஸ் காரணமாக, இதுவரை உலகளவில் 27,352 பேர் உயிரிழந்துள்ளனர். 5,94,687 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், வைரசால் பாதிக்கப்பட்ட 1,33,057 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 19 உயிரிழந்துள்ளனர். 918 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தியாவை பொருத்தவரை முதன் முதலில் கேரள மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு தெரிய வந்தது.. கேரளாவில் தற்போது வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 176-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 65 முதியவர் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மாநிலத்தில் முதன் முறையாக முதியவர் உயிரிழந்துள்ளார். இதற்கிடையே, தெலுங்கானா மாநிலத்திலும், கொரோனா பாதிப்புக்கு முதன் முதலாக இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *