கொரோனா பாதிப்பு – ரூ.25 கோடி வழங்கிய இந்தி நடிகர் அக்‌ஷய்குமார்

கொரோனா வைரஸ் பாதிப்புக்காக பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் 25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

மும்பை, மார்ச்-28

கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவிகளை மக்கள் வழங்கலாம் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார், கொரோனா வைரஸ் பாதிப்புக்காக பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு 25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *