சென்னையில் இருந்து அவசர தேவைகளுக்கான பயணம் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்: காவல்துறை

சென்னையில் இருந்து அவசர தேவைகளுக்காக பயணம் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

சென்னை, மார்ச்-28

திருமணம், மருத்துவம், இறப்பு உள்ளிட்டவற்றுக்காக செல்ல அவசரகால கட்டுப்பாட்டு அறைக்கு விண்ணப்பிக்கலாம். அவசர பயணத்துக்கான அனுமதி சீட்டு பெற கோரிக்கை கடிதத்துடன் அடையாள ஆவணங்களை தர வேண்டும். 7530001100 இல் தொடர்பு கொண்டோ/ எஸ்எம்எஸ் /வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவிக்கலாம். gcpcorona2020@gmail.com என்ற முகவரிக்கும் மின்னஞ்சல் அனுப்பலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *