கொரோனா தடுப்பு பணிக்காக நிதியுதவி அளியுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

கொரோனா தடுப்பு பணிக்காக பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியை வழங்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெல்லி, மார்ச்-28

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது 195க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை உண்டாக்கி வருகிறது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டி உள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வைரஸ் பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிக்காக பொதுமக்கள் நிதி வழங்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். PM CARES, 2121PM20202 என்ற கணக்கில் பொதுமக்கள் பணம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Name of Bank&branch: state bank of india, new delhi branch, UPI ID; pmvarse@sbi. IFSE CODE: SBIN0000691, SWIFT CODE: SBININBB104, இதன் மூலம் மக்கள் பணம் செலுத்தலாம்.

கொரோனா தடுப்பு பணிக்காக நிதியுதவி அளியுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் தங்களால் ஆனா நிதியை தரலாம். பொதுமக்கள் அளிக்கும் சிறிய அளாவிலான நிதியுதவியும் ஏற்றுக்கொள்ளப்படும். இந்த நிதிக்கு அனைத்து தரப்பு மக்களும் நன்கொடை அளிக்கலாம். பேரிடர்களின் போது மக்களை காக்க இது போன்ற நிதியுதவிகள் உதவும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *