காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீர், செப்டமர்-28
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒரு ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்
ஜம்மு-காஷ்மீரில் ரம்பா மாவட்டத்தில் உள்ள படோட்டி பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவ வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அந்த பகுதிகளில் தேடுதல் வேட்டைகளில் ஈடுபட்டனர்.

இதனையறிந்த தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பியோட முயன்று, குடியிருப்பு வீட்டுக்குள் புகுந்துள்ளனர். மேலும், அந்த வீட்டு உரிமையாளரை பிணைய கைதியாக வைத்துக்கொண்டு ராணுவ வீரர்களை மிரட்டியுள்ளனர். சாதூர்யமாக செயல்பட்ட ராணுவ வீரர்கள் அந்த வீட்டை முற்றிலும் சுற்றி வளைத்து, வீட்டு உரிமையாளாரை மீட்டனர். மீண்டும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ராணுவ வீரர்களை நோக்கி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதற்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவ வீரர்கள், துப்பாக்கிச்சூடு நடத்தி மூன்று தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றனர். தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற தருணத்தை ராணுவ வீரர்கள் பலரும் உற்சாகமாக கொண்டாடினார். மேலும், படோட்டி பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடர்ந்து வருகிறது.