கொரோனாவைத் தடுக்க ரூ.9000 கோடி தேவை: பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழகத்துக்கு ரூ.9 ஆயிரம் கோடி நிதி தேவை என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

சென்னா, மார்ச்-28

கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நிதி கேட்டு தமிழக முதல்வர் பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா வைரஸ் தடுப்புக்காக நாடு தழுவிய ஊரடங்கை தமிழக அரசு, தீவிரமாக பின்பற்றுவதாக கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.9000 கோடி நிதி தேவைப்படுகிறது என்றும், மத்திய அரசு அந்த நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்த மத்திய அரசுக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலைத் தடுக்கவும், பாதிப்புகளை ஈடு செய்யவும், கொரோனா சிகிச்சை முறைகளை மேம்படுத்தவும் நிதி தேவை என்றும் அந்த கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *