கொரோனா பீதி – நீட் தேர்வு ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, இந்தியா முழுவதும் மே 3-ந்தேதி நடைபெற இருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டெல்லி, மார்ச்-26

எம்பிபிஎஸ், பிடிஸ் படிக்க நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். பிளஸ்-2 தேர்வு முடிந்த நிலையில் மாணவ- மாணவிகள் நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். மே 3-ந்தேதி நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஏப்ரல் 14-ந்தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனைத்தொடர்ந்து நீட் உள்ளிட்ட முக்கியமான தகுதித்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. மே கடைசி வாரத்தில் நீட் தேர்வு நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *