தமிழகத்தில் புதிதாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்களை நியமிக்க உத்தரவு

தமிழகத்தில் 530 மருத்துவர்கள், 1,000 செவிலியர்களை நியமனம் செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, மார்ச்-27

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 530 மருத்துவர்கள், 1,000 செவிலியர்கள், 1,508 ஆய்வக டெக்னீசியன்களை நியமனம் செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக காலியிடங்களை நிரப்பவும், மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்படும் நபர்கள் 3 நாளில் பணியில் சேரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிதாக 200 ஆம்புலன்ஸ்களை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *