விஜய்க்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு ரூ.10 கோடி ?

செப்டம்பர்-28

விஜய்க்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு 10கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

விஜய்-அட்லி கூட்டணியில் உருவான மூன்றாவது திரைப்படம் பிகில். தீபாவளியன்று திரைக்கு வரவுள்ளது. அதனையடுத்து, நடிகர் விஜய்யின் 64-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தின்படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், விஜய்க்கு கதாநயகியாக நடிக்க இந்தியில் கியார அத்வானி உட்பட ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, விஜய்க்கு வில்லனாக நடிப்பதற்கு இந்தி முன்னணி நடிகர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், அவர்களிடம் கால் ஷீட் இல்லாததால், நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே, விஜய்க்கு வில்லனாக நடிப்பதற்கு விஜய் சேதுபதிக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்து பரவி வருகிறது. ஆனாலும் இதனை படக்குழுவினர் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *