சென்னையில் 24,000 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்- அமைச்சர் ஜெயக்குமார்

சென்னையில் மட்டும் 24,000 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை, மார்ச் 27

சென்னையில் இன்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

போலியோவை விரட்டியடித்த பெருமை இந்தியாவுக்கு உண்டு. கொரோனாவையும் விரட்டியடிக்க வழிகாட்டுதல்களை முறையாக பின்றபற்ற வேண்டும். கொரோனா தொடர்பான சந்தேகங்களுக்கு 044-25384520 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சென்னை மாநகராட்சியில் மட்டும் 24,000 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் சமூக விலகியிருத்தலை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *