கொரோனா நடவடிக்கைகள் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார்.

சென்னை, மார்ச்-27

கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்தார். தமிழகத்தில் 144 தடை உத்தரவை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி இந்த உரையாடலின் போது வலியுறுத்தினா. மேலும், மாநில நிதி நிலவரம் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து பிரதமர் மோடி, முதலமைச்சர் பழனிசாமியிடம் கேட்டறிந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *