ஏப்ரல் 2ம் தேதி முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000.. தமிழக அரசு அறிவிப்பு

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த ரூ.1,000 ரூபாயை ஏப்ரல் 2-ம் தேதி முதல் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை, மார்ச்-26

தமிழ்நாட்டில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டுக்குள் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் அனைத்து மாநில அரசுகளும் மக்களுக்கு நிதியுதவி அறிவித்து வருகின்றன. அந்த வகையில் கொரோனா பாதிப்பு காரணமாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த திட்டம் ஏப்ரல் 2 ம் தேதி முதல் தொடங்கும் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரையும் விலையின்றி வழங்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *