கொரோனா – ஒருமாத சம்பளத்தை வழங்கும் அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள்..

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளனர்.

சென்னை, மார்ச்-26

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் மொத்தம் 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒருவர் கொரோனாவால் பலியாகி உள்ளார். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க நிதி உதவியாக 4000 கோடி ரூபாயை மத்திய அரசிடம் உதவியாக கேட்டுள்ளார்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகளுக்காக அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளனர். அதோடு அதிமுக எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி வழங்குவார்கள் என்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் நிதியிலிருந்து ரூ.25 லட்சமும் வழங்குவார்கள் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *