தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.626 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை

தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.626 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சென்னை, மார்ச்-26

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை டாஸ்மாக் விற்பனை நிலையங்கள் மூடப்படுவதற்கு முன்பு ஆறு மணி நேரத்தில் 210 கோடி மதிப்புள்ள மது விற்பனையாகி உள்ளது.
செவ்வாய்க்கிழமை மதியம் முதல் மாலை 6 மணி வரை ஊரடங்கு காலக்கெடு ஆரம்பிப்பத்தற்கு இடையில் மாநிலம் முழுவதும் சுமார் 5,300 கடைகள் திறந்திருந்தன அதில் கடைசி 6 மணி நேரத்தில் ரூ.210 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது. மார்ச் 21-ல் ரூ.220 கோடி, 23-ல் 196 கோடி, மார்ச் 24-ம் தேதி வரை 210 கோடி-க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில், இதில் 62 சதவீதம் பிராந்தி, விஸ்கி, ரம் உள்ளிட்ட மது வகைகளும், 38 சதவீதம் பீர் வகைகளும் அடங்கும். அன்று மட்டும் சென்னை மண்டலத்தில் ரூ.48.61 கோடியும், மதுரை மண்டலத்தில் ரூ.41.54 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.41.22 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ.43.52 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.45.60 கோடியும் மதுவிற்பனை நடந்துள்ளது. மொத்தமாக ஒரே நாளில் தமிழகம் முழுவதும் ரூ.220.49 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *