தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29-ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29-ஆக உயர்ந்துள்ளது.

சென்னை, மார்ச்-26

இந்தியாவில் கொரோனா வைரஸ் கடந்த சில தினங்களாக வேகமாக பரவி வருகிறது. இதனிடையே, தமிழகத்தில் ஏற்கனவே 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

துபாயில் இருந்து திருச்சி வந்த 24 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவரது உடல்நிலை சீராக உள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மேலும் சென்னையை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தோற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றின் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29-ஆக அதிகரித்துள்ளது. மூலக்கூறு ஆய்வக கூடங்களில் இருந்து கொடுக்கக்கூடிய தகவலின் அடிப்படையில்தான் தமிழக சுகாதாரத்துறை இந்த தகவல்களை வெளியிட்டு வருகிறது. லண்டனில் இருந்து சென்னை வந்த 24 வயது இளைஞர் மற்றும் 65 வயது பெண் ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *