கோயம்பேடு மார்க்கெட் வழக்கம்போல் இயங்கும்

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 2 நாட்கள் மூடப்படுவதாக இருந்த நிலையில் வழக்கம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மார்ச்-26

சென்னை கோயம்பேடு மார்க்கெட் நாளையும், நாளை மறுநாளும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இப்போது இந்த விடுமுறையை ரத்து செய்து மார்க்கெட்டை வழக்கம்போல் திறக்க வியாபாரிகள் முடிவுகள் செய்துள்ளனர்.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் அனைத்து சங்க நிர்வாகிகளின் கூட்டமைப்பினர் எடுத்த முடிவின்படி நாளையும், நாளை மறுநாளும் கோயம்பேடு மார்க்கெட் வழக்கம் போல் செயல்படும் என்றும் மக்களின் அத்தியாவசிய நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
காய்கறிகள் அனைத்து இடங்களுக்கும் தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில் மார்க்கெட்டை திறக்க உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். எனவே சிறு வியாபாரிகள் வழக்கம்போல் மார்க்கெட்டுக்கு வந்து காய்கறிகளை வாங்கி சென்று அந்தந்த பகுதிகளில் மக்களுக்கு விற்பனை செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *