கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டும் போதாது : உலக சுகாதார அமைப்பு

ஊரடங்கு அறிவித்தால் மட்டும் கொரோனாவை எதிர்கொள்ள முடியாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜெனிவா, மார்ச்-26

கொரோனா வைரஸ் காரணமாக, உலகம் முழுவதிலும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளிலேயே முடக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனாவை ஒழிக்க ஊரங்கு மட்டுமே பலன் தராது உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.

இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் டெட்ராஸ் அந்தானம் கேப்ரியசஸ் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல நாடுகளும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளன. ஆனால், ஊரடங்கு அறிவித்தால் மட்டும் கொரோனாவை எதிர்கொள்ள முடியாது. இந்த சமயத்தைப் பயன்படுத்தி உலக நாடுகள் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கண்டிப்பாக, ஊரடங்கின் போது மக்கள் நடமாட்டம் இருக்காது. இது மிகப்பெரிய வாய்ப்பு. இத்தகைய சூழலில் ஊரடங்கு அறிவித்ததுடன் மட்டும் நிற்காமல், பாதிப்பு பரவும் நிலை அறிந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை, அவர்கள் சார்ந்த பகுதிகளில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த நாட்டு அரசுகள் மேற்கொள்ள வேண்டும். சர்வதேச அளவில் கொரோனா வைரஸால் 4 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 21,000 பேர் மரணமடைந்துள்ளனர். ஊரடங்கு வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரு அரசு துரிதகதியில் செயல்பட வேண்டும்”.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *