இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16-ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லி, மார்ச்-26

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக, நாடு முழுவதும் ஏப்ரல் 14ம்தேதி வரை
ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

இதனிடையே, இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மளமளவெஉ உயர்ந்து வருகிறது. இதுவரை கொரோனாவால் 650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 3 பேர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *