கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் – மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

சென்னை, மார்ச்-26

உலகையே கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உலகளவில் 22 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் அதி வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் தற்போது வரை ஒருவர் உயிரிழந்துள்ளார். 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முகக்கவசம் அணிந்தபடி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆட்சியர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட உயர்அதிகாரிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *