கொரோனா – ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு முழுவதும் சுங்க கட்டணம் ரத்து

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் சுங்க கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, மார்ச்-25

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 606 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 11 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கொரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு முழுவதும் சுங்க கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யபடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொரோனா எதிரொலியாக இன்றுமுதல் ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் சுங்க கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *