தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் குணமடைந்தார் – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லியை சேர்ந்த நபர் குணமடைந்தார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். டெல்லி நபரின் ரத்த மாதிரிகளை 2 முறை பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை. இன்னும் 2 நாட்களில் டெல்லியை சேர்ந்த நபர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

சென்னை, மார்ச்-25

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா இருப்பதாக தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

இதனிடையே, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லியை சேர்ந்த நபர் குணமடைந்தார் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது:

“டெல்லியில் இருந்து வந்து கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர் குணமடைந்து வருகிறார். இவர் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர். அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட இரண்டு பரிசோதனைகளின் முடிவுகளில் இவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *