விழித்திரு… விலகி இரு… வீட்டில் இரு…. – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை

கொரோனாவுக்கு எதிராக போராட விழித்திரு… விலகி இரு… வீட்டில் இரு…. என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை, மார்ச்-25

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் இரவு 7 மணிக்கு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது ;-

தமிழக முதலமைச்சராக இல்லாமல் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன். 21 நாள் ஊடரங்கு என்பது விடுமுறை அல்ல. உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் அரசின் உத்தரவு. சாதி, மதம், இனம் வேறுபாடு இன்றி கொரோனாவை விரட்டியடிக்க உறுதி ஏற்போம்.
கொரோனாவை ஒழிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் ரூ. 3850 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 10,518 படுக்கைகள் தயாராக உள்ளன. மக்களின் ஒவ்வொருவடைய ஒத்துழைப்பும் அவசியம். அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். ரேசன் கடைகளில் ஏப்ரல் மாத பொருட்கள் விலையின்றி வழங்க ஏற்பாடு.

சமூக விலகல் என்பது முக்கியமானது. வெளியில் பொருட்கள் வாங்க செல்லும்போது 3 அடி தூர இடைவெளியை கடைபிடிப்போம். நமது பாரம்பரிய முறைப்படி வெளியின் சென்று வீட்டிற்கு வரும்போது கால், கைகளை நன்றாக கழுவ வேண்டும்.
கொரோனாவுக்கு எதிராக போராட விழித்திரு… விலகி இரு… வீட்டில் இரு….

இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *