தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி

தமிழகத்தில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மார்ச்-25

கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதுமே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பிற்கு அனைத்துத் தேர்வுகளும் முடிவடைந்த நிலையில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வுகள் இன்றி தேர்ச்சி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதேபோல் புதுச்சேரி மற்றும் உத்தர பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *