இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்க்கு கொரோனா தொற்று உறுதி

இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 71 வயதாகும் இளவரசர் சார்ஸுக்கு கரோனா பாதிப்பு இருப்பதை க்ளாரன்ஸ் மாளிகை உறுதி செய்துள்ளது.

மார்ச்-25

உலத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இங்கலாந்திலும் மிகப்பெரிய அளவில் பரவி வருகிறது. இந்த வைரஸ் தற்போது இங்கிலாந்து மகாராணி எலிசபெத் குடும்பத்தையும் பதம் பார்த்துள்ளது. மகாராணி எலிசபெத்தின் மகன் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் (வயது 71). இவருக்கு லேசான கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறி இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் அவருக்கு உடனடியாக பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் அவர் நல்ல உடற்தகுதியுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மனைவி கமிலாவுக்கும் (72) பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் பால்மோரலில் உள்ள அரண்மனை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மார்ச் 12-ந்தேதிக்குப்பின் இளவரசர் சார்லஸ் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டாலும், கடந்த வாரங்களில் இளவரசர் சார்லஸ் அதிக அளவிலான பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும், அவருக்கு எங்கிருந்து இந்த வைரஸ் பரவியது என்பதை கண்டுபிடிப்பது கடினமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *