கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.4000 கோடி தேவை – பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு கூடுதல் நிதியாக ரூ. 4000 கோடி ஒதுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை, மார்ச்-25

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும் அரசு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு கூடுதல் நிதியாக ரூ. 4000 கோடி ஒதுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களை மேலும் கூடுதலாக 2 மாதங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் சிறுகுறு நிறுவனங்களுக்கான வங்கி கடன் வட்டியை இரண்டு காலாண்டு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை ரூ. 500 கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, கொரோனாவுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையும் பாராட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *