கொரோனா பீதி – தேசிய மக்கள்தொகை, என்.பி.ஆர். கணக்கெடுப்பு ஒத்திவைப்பு

கொரோனா பீதியால், தேசிய மக்கள்தொகை மற்றும் என்.பி.ஆர். கணக்கெடுப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லி, மார்ச்-25

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் 500-க்கும் அதிகமானோருக்கு பரவியுள்ளது. இதனால், நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்கள் வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இந்நிலையில், ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைபெறவிருந்த 2021-ம் ஆண்டுக்கான தேசிய மக்கள்தொகை, என்.பி.ஆர். கணக்கெடுப்பு பணிகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் முதல்கட்ட தேசிய மக்கள்தொகை, என்.பி.ஆர். பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *