எனது வீட்டை மருத்துவமனையாக மாற்ற தயார் – கமல்

தனது வீட்டை மருத்துவமனையாக மாற்றி எளியோருக்கு உதவ தயாராக இருக்கிறேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை, மார்ச்-25

கொரோனா வைரஸ் இந்தியாவை மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்து வருகிறது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவமனை வெள்ளிக்கிழமை முதல் செயல்பட தொடங்குகிறது.

இந்நிலையில் தனது வீட்டை மருத்துவமனையாக மாற்றி எளியோருக்கு உதவ தயாராக இருக்கிறேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி, மக்களுக்கு உதவ நினைக்கிறேன். அரசின் அனுமதி கிடைத்தால், அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன். உங்கள் நான்…’’ என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *