காஷ்மீர் விவகாரத்தில் அடக்கி வாசித்தது அமெரிக்கா

புதுடெல்லி ஆகஸ்ட் 26

காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்வு காண்பார்கள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் ஜி7 மாநாட்டுக்கிடையில் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் சந்தித்து உரையாடினர்.

காஷ்மீர் விவகாரத்தில் தாங்கள் முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதாக தன்னிடம் மோடி கூறியதாக ட்ரம்ப் தெரிவித்தார். மேலும் இந்தியாவும் பாகிஸ்தானும் இதற்கான தீர்வைக் கண்டுபிடித்துக் கொள்வோம் என்றும் ‘3ம் நாடு தலையீடு கோரி தொந்தரவுபடுத்த விரும்பவில்லை’ என்றும் மோடி கூறியதாக ட்ரம்ப் தெரிவித்தார். 1947-க்கு முன் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருநாடாக இருந்தது என்று கூறிய பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் சமீபத்தில் நிகழ்த்திய தொலைபேசி உரையாடலைக் குறிப்பிட்ட அதிபர் ட்ரம்ப், வறுமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருநாடுகளிலும் உள்ளது. ஆகவே இருநாடுகளும் மக்கள் நலனுக்காக பாடுபடவேண்டும் என்று இம்ரான் கூறியதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பார்கள் என்பதே தன் நிலைப்பாடு என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.காஷ்மீர் பிரச்சனையில் இந்திய அரசு உறுதியாக இருப்பதையடுத்து அமெரிக்க அதிபர் ட்ரம் அடக்கி வாசிக்க ஆரம்பித்து விட்டார் என்றே கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *