கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை களத்தில் இறங்கி ஆய்வு செய்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட #COVID19 சிகிச்சை வார்டினை நேரில் பார்வையிட்டு, அங்கு பணியாற்றும் மருத்துவர்களிடம் சிகிச்சை முறை குறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டறிந்தார். #TN_Together_AgainstCorona #Coimbatore

கோவை, மார்ச்-25

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் வாகனங்களை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று நேரில் பார்வையிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சியார் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எஸ்.பி. வேலுமணி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், அளிக்கப்பப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக, இன்று கோவை மாநகராட்சியில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணிகளை துவக்கி வைத்தார்.

அதன்பிறகு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் உள்ள அம்மா உணவகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அங்கு வழங்கப்படும் உணவின் தரத்தை பரிசோதித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எஸ்.பி.வேலுமணி, இஎஸ்ஐ மருத்துவமனையில் 540 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக கூறினார். மேலும் இஎஸ்ஐ சார்பாக 100 வெண்டிலேட்டர்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *