ஊரடங்கு உத்தரவை பின்பற்றாவிட்டால் சுடப்படுவார்கள் – தெலுங்கானா முதல்வர் எச்சரிக்கை

ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாதவர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்க வேண்டியிருக்கும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் எச்சரித்துள்ளார்.

ஐதராபாத், மார்ச்-25

கொரோனா வைரசின் தீவிரத்தை இன்னும் சரியாக மக்கள் புரிந்துகொள்ளவில்லை. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வந்து சுற்றுவதை பார்க்க முடிகிறது.

இதற்கிடையே ஊரடங்கு உத்தரவை மீறும் பொதுமக்களுக்கு தெலுங்கானா முதல்வர், சந்திரசேகர ராவ் கண்டிப்புடன் கூடிய எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘அமெரிக்காவில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த ராணுவம் அழைக்கப்பட்டது. எனவே, மக்கள் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால், 24 மணி நேர ஊரடங்கை விதிக்க வேண்டிவரும். மேலும் தேவையின்றி நடமாடுவோரை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்க வேண்டியிருக்கும். அதுபோன்ற நிலைமையை ஏற்படுத்திவிடக்கூடாது என்று மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்’ என சந்திரசேகர ராவ் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *