வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் பாஸ்போர்ட் பறிமுதல் – அமைச்சர் விஜயபாஸ்கர்

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தால் அவர்களது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்த்துள்ளார்.

சென்னை, மார்ச்-25

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் 18 பேருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ”வெளிநாட்டில் இருந்து வந்தவர்களால் கடுமையாக பாதிப்பு ஏற்படுகிறது. இதுவரை வெளிநாட்டில் இருந்து வந்த 15000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் கண்டிப்பாக சுய தனிமைப்படுத்தலை பின்பற்றி தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது. ஒருவேளை அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறி வெளியே வந்தால் அவர்களது பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்படும். வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை கடுமையாக எச்சரிக்கிறேன். அவர்கள் தங்கள் வெளிநாட்டு பயணங்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்காவிடில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *