புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 2 ஆயிரம் உதவி

புதுச்சேரியில் 3.44 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி, மார்ச்-24

கொரோனோ வைரஸ் தாக்கத்தால், புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால், அமைப்புசாரா தொழிலாளர்கள், மீனவர்கள், கூலிவேலை செய்பவர்கள், நடைபாதை வியாபாரிகள் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு உத்தரவு, நிவாரணம் வழங்குவது தொடர்பாக சட்டசபையில் அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாராயணசாமி இன்று ஆலோசனை நடத்தினார். இதையடுத்து,, கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பொருளாதார இழப்பு ஏற்படும் என்பதால், குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 2 ஆயிரம் உதவிதமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் அறிவித்த நிலையில் புதுச்சேரியில் இரண்டாயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *