வீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி, மார்ச்-24

புதுச்சேரியில் ஒரு நபர் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை காரணமாக மார்ச் 31-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். அதேவேளையில் அத்தியாவசிய பொருட்களுக்காக மெடிக்கல், மளிகைக்கடை, பால் விற்பனையகம் போன்றவை திறந்திருக்கும் என அறிவித்திருந்தார். ஆனால் கொரோனா தொற்று ஆபத்தை அறியாமல் ஊடரங்கு உத்தரவை பெரிதாக மக்கள் எடுத்துக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேற ஆரம்பித்தனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அதிரடியாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலின் நிலை 2-ம் கட்டத்தில் உள்ளது, சமூக பரவல் என்ற 3-ம் கட்டத்திற்கு உயர்ந்தால் மிகப்பெரிய சோதனையை சந்திக்க வேண்டியிருக்கும். இதனால் ஊடரங்கு உத்தரவை மீறி மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *