வீ்ட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் – எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்

கொரோனா வலையில் சிக்காமல் இருக்க, வீட்டிலேயே இருக்குமாறு
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார். #Corona #CoronaVirusAlert #IndiaFightsCorona #CoronaVirusUpdates #Vitaminc #NamakaagaUllaatchi

சென்னை., மார்ச்.24

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி,கிராம ஊராட்சிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளார். மேலும் சுத்தமான கரங்களே சுகாதாரத்தின் வரங்கள் என்ற டிஜிட்டல் விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் அவர் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், உலகையே அச்சுறுத்தும் கொரோனா வலையில் சிக்காமல் இருக்க, நம் நோய் எதிர்ப்பு சக்தியே நமக்கு அரணாகும். ஊட்டச்சத்து நிறைந்த உணவும், முறையான சுகாதாரமும் அவசியம் என்பதை உணர்ந்து செயல்படுவோம் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ளார்.

மேலும், வீட்டிலேயே பாதுகாப்புடன் இருங்கள் என்றும், யாருடன் தொடர்பில் இல்லாமல் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வதே கொரோனோவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *