இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது. ஹிமாச்சல பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 69 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

டெல்லி, மார்ச்-23

உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. 192 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,297 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 3,49,090 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். தெலுங்கானாவில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் 464 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஹிமாச்சல பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 69 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால்,இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *