தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை, மார்ச் 23

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 500ஐ நெருங்கி வருகிறது. அதிகமாக மகாராஷ்டிராவில் 97 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுவரை கேரளாவில் 92 பேர் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தியாவில் 9 பேர் கொரோனவால் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் தமிழகத்தில் பாதித்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விஜயபாஸ்கர் கூறுகையில், ”லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இவர் புரசைவாக்கத்தை சேர்ந்தவர்.சென்னையை சேர்ந்த இவர் 25 வயது நபர். மேலும் 48 வயது திருப்பூரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கோவையில் உள்ளார். மதுரை நபர் 54 வயதை சேர்ந்த இவர் மதுரையில் இருக்கிறார். இவருக்கு வெளிநாடு, வெளி மாநிலம் சென்றவர்களுக்கான அறிகுறி இல்லை. இவருக்கு எப்படி நோய் ஏற்பட்டது என்று கண்டுபிடிக்கப்படவில்லை. இதை விசாரித்து வருகிறோம். இவருக்கு உடல் நிலை மோசமாக உள்ளது. இது கொஞ்சம் சிக்கலான நோயாளி. ஏனென்றால் இவருக்கு மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், ரத்த கொதிப்பு, சர்க்கரை வியாதி இருக்கிறது. அதனால் இவரை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தமிழகத்தில் 12 ஆயிரம் 519 பேர் வரை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்னனர்.இவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கிறோம். மக்களுக்கு தெரிய வேண்டும், வெளி நபர்கள் உள்ளே வர கூடாது என்பதை அறிவிக்க வேண்டும் என்று ஸ்டிக்கர் ஒட்டி இருக்கிறோம். இவர்களிடம் இருந்துதான் வைரஸ் பரவுகிறது. இவர்கள் வீட்டில் இருப்பது கட்டாயமானது. விருதுநகரில் ஆயுதப்படை காவலர் ஒருவருக்கு கொரோன அறிகுறி உள்ளது. ஆனால் இதை உறுதி செய்யவில்லை. சோதனைக்காக இவரின் ரத்தம் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், கோவையில் பலர் வீட்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். 8 மாவட்டங்களில் காவல் துறை அலெர்ட் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *