கொரோனா எதிரொலி – வங்கிகள் வேலை நேரம் குறைப்பு

கொரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் தனியார் வங்கிகளின் பணி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சில முக்கிய சேவைகளையும் வங்கிகள் ரத்து செய்துள்ளன.

டெல்லி, மார்ச்-23

வங்கிகளின் பணி நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை என மாற்றப்பட்டுளள்து. அதாவது, தினமும் வங்கிகள் 4 மணி நேரம் மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், பாஸ்புக் பதிவு மற்றும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை மாற்றுதல் போன்ற சேவைகளை வங்கிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கின்றன.

மேலும், காசோலைகள் வங்கியின் கவுண்டர்களில் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும், வங்கிக்கு வெளியே அல்லது ஏடிஎம் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் செக் டெபாசிட் பெட்டகங்கள் வழியாக மட்டுமே ஏற்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணம் எடுத்தல், பணம் கட்டுதல், காசோலை, அரசு தொடர்பான பணிகள் மற்ற வங்கிகளுக்கு பணம் கொடுத்தல் பணிகள் மட்டுமே நடைபெறும்.

புதிதாக நகைக்கடன் வழங்குவது, புதிய வீட்டுக்கடன் உள்ளிட்ட கடன் வழங்கும் பணிகள் இனி நடைபெறாது. இத்தகைய விதிமுறைகள் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

சில வங்கிகள் இந்த நேரத்தை அமல்படுத்த ஒரு சில நாட்கள் எடுத்துக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *