இந்திய பங்குச் சந்தைகள் 10%க்கு மேல் சரிவு – 45 நிமிடங்கள் வர்த்தகம் நிறுத்தம்

இந்திய பங்குச் சந்தைகள் 10%க்கு மேல் சரிந்ததால் 45 நிமிடங்கள் வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது.

மும்பை, மார்ச்-23

கொரோனா எதிரொலியால் கடந்த சில நாட்களாக பங்குச்சந்தைகள் கடும் சரிவை எதிர்கொண்டு வருகின்றன. இன்று காலை சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், காலை 9.43 மணியளவில் 2,600 புள்ளிகள் சரிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 750 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி அடைந்தது.

இதையடுத்து, சென்செக்ஸ் 10% சரிவடைந்ததால் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் 45 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை, இந்திய ரூபாய் மதிப்பு மற்றும் கரோனா வைரஸ் தாக்கத்தினால் பங்குச்சந்தைகள் வரலாறு காணாத சரிவை சந்தித்து வருகின்றன. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 76 ரூபாய்க்கும் மேலாக வீழ்ச்சி கண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *