சட்டப்பேரவை கூட்டத் தொடர் : திமுக புறக்கணிப்பு

சென்னை. மார்ச் 23

கொரோனா வைரஸ் காரணமாக சட்டப்பேரவை கூட்டத் தொடரை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் கூட்டத்தொடரை புறக்கணித்துள்ளன.

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக சட்டமன்ற கொறடா சக்கரபாணி, தமிழகத்தில் 9 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 8950 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டப்பேரவையின் நடப்பு கூட்டத் தொடரை ஒத்திவைக்க தி.மு.க கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் எங்கள் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காத காரணத்தால் சட்டப்பேரவை கூட்டத் தொடரை புறக்கணிக்க தி.மு.க முடிவு செய்துள்ளது என அவர் கூறினார்

தி மு க அறிவிப்பைத் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸலீம் லீக் கட்சி களும் சட்டப்பேரவையை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *