கொரோனா அச்சுறுத்தல்: பழையை மின் கட்டணத்தை செலுத்தினால் போதும் – த.நா. மின்வாரியம்

சென்னை. மார்ச்.23

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முந்தைய மாதத்து மின் கட்டணத்தை செலுத்தினால் போதும் என தமிழ் நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின் வாரியம் விடுத்த செய்தி குறிப்பில், கொரோனா வைரஸ் பரவல் பீதி காரணமாக, தாழ்வழுத்த இணைப்புகளில், 2020 மார்ச் மாத பட்டியலுக்கு, 22ம் தேதி முதல் 31ம் தேதி வரை, ‘மீட்டர் ரீடிங்’ எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், ஜனவரி, பிப்., மாத கணக்கீட்டின்படி, பணம் செலுத்த கோரப்படுகிறது. இவ்வாறு செலுத்திய கட்டணம், பின்வரும் மாத கணக்கீட்டு மின் கட்டணத்தில் சரிசெய்யப்படும். மின் கட்டண மையங்களுக்கு வருவதை தவிர்த்து, ஏற்கனவே தெரிவித்தபடி, இணையதளம், மொபைல் செயலி போன்ற, ‘டிஜிட்டல்’ முறையில் மின் கட்டணத்தை செலுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *