கோயம்பேடு மார்க்கட் திறப்பு – வரத்து குறைவால் காய்கறிகள் விலை உயர்வு

சென்னை – மார்ச்.23

சென்னை கோயம்பேடு வணிக அங்காடிகள் சுய ஊரடங்குக்கு பின்னர் இன்று மீண்டும் வழக்கம் போல் திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் நேற்று மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தமிழகத்தில் இன்று காலை 5 மணி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு சந்தை இன்று மீண்டும் திறக்கப்பட்டது. காய்கறி மற்றும் பழக்கடைகள் வழக்கம் போல் திறக்கப்பட்டுள்ளன. இதனிடையே சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது .இதன் காரணமாக வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்த மாவட்டங்களுக்கு வரவும் இந்த மாவட்டங்களில் இருந்து வெளியே செல்லவும் தடை விதிக்தகப் பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதனால் கத்திரி, வெண்டை உள்ளிட்ட காய்களின் விலை அதிதரித்து உள்ளது. பொது மக்களின் கூட்டமும் வழக்கத்தை விட குறைந்தே காணப்படுதிது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *