தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை, மார்ச்-22

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு ஒன்றில் “தமிழகத்தில் புதிதாக இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கலிபோர்னியாவிலிருந்து வந்த 63 வயதுப் பெண் ஸ்டான்லி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். துபாயிலிருந்து வந்த 43 வயது ஆண் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இருவரது உடல்நிலையும் சீராக உள்ளது” என்றார்.

ஏற்கனவே 7 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மேலும் இருவருக்கு பாதிப்பட்ட நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

இந்திய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 360 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *