பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் – தமிழக அரசு

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

சென்னை, மார்ச் 22

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 27ந்தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க இருந்தன. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்காமல் இருக்க தேர்வை ஒத்தி வைக்கும்படி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கூறினார். ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 15ந்தேதி தொடங்கி நடைபெறும் எனவும் 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ஏற்கனவே அறிவித்தபடி நடைபெறும் எனவும் கூறினார்.
புதுச்சேரியிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட கூடும் என கூறப்பட்டு வந்தது. எனினும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளி கல்விதுறை இன்று விளக்கம் அளித்து உள்ளது. தேர்வு அட்டவணையில் எந்தவித மாற்றமும் இருக்காது எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *