‘சர்ச்சை ட்வீட்’ – ராஜேந்திர பாலாஜி கட்சிப் பதவி பறிப்பு!

விருதுநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விடுவிக்கப்பட்டுள்ளார்.

சென்னை, மார்ச் 22

விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விடுவிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூட்டாக அறிவித்துள்ளனர். ‘விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.டி.ராஜேந்திர பாலாஜி இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்’ என்று அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பில், ராஜேந்திர பாலாஜியை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிப்பதற்கான காரணம் எதையும் குறிப்பிடவில்லை. ஆனாலும் அமைச்சர் பதிவிட்ட ட்வீட் ஒன்றுதான் இந்த பதவி பறிப்புக்கு அடிப்படை காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “இந்துக்களின் மத வழிபாட்டு தன்மைகளையும் நம்பிக்கைகளையும் இயற்கையான வழிபாடுகளையும் கிண்டல் செய்த போலி போராளிகளுக்கு இன்று நாட்டில் நடக்ககூடிய சம்பவம் ஒரு பாடம்.. ஒரு படிப்பினை-. இறைவா ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவே இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் கொரோனாவிடமிருந்து காப்பாற்று” என்று பதிவிட்டிருந்தார் (பின்னர் இதை நீக்கி விட்டார்). இதுதான் பதவி பறிப்புக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது

மாவட்ட செயலாளர் பதவி என்பது ஒரு கட்சியில் முக்கியமான பொறுப்பு… மாவட்ட எம்பி முதல் எம்எல்ஏக்கள் வரை மாவட்ட செயலாளர்களை மீறி எதுவுமே செய்ய முடியாது.. எம்எல்ஏக்களை பரிந்துரை செய்வதும், அவர்களை வெற்றி பெற வைப்பதும் என எல்லாமே மா.செ.க்களின் பொறுப்புதான்.. இந்த பதவிக்கு ஏராளமான போட்டா போட்டி கட்சியில் நடக்கும்.. அப்படிப்பட்ட முக்கியமான பதவியை அமைச்சரிடம் இருந்து பிடுங்கி உள்ளது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *