மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் தனியார், அரசுப் பேருந்து சேவைகள் மார்ச் 31ம் தேதி வரை நிறுத்தம்

தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் வரும் 31ந்தேதி வரை நிறுத்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை, மார்ச் 22

கொரோனா பரவலை தடுக்க இன்று நாடு முழுவதும் சுய ஊரடங்கை பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். அதனை ஏற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை என்று அறிவிக்கப்பட்டியிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தை பொறுத்தவரையில் நாளை அதிகாலை 5 மணி வரை இது நீட்டித்தது. இந்நிலையில் நாடு முழுவதும் 75 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு அம்மாநில அரசுக்கு அறிவுறுத்தியது. இந்த பட்டியலில் தமிழகத்தை பொறுத்தவரையில் மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்ட எல்லைகளை மூடுமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு பரிந்துரைத்தது.

இந்நிலையில் மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் தனியார் மற்றும் அரசுப் பேருந்து சேவைகள் இன்று முதல், மார்ச் 31ம் தேதி வரை நிறுத்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னையில் இன்று முதல் மார்ச் 31-ம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம். வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பல்வேறு தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது. நோய் தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *