எதிரிகள் வாலாட்டினால் கடுமையான பதிலடி-ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

மும்பை, செப்டம்பர்-28

எதிரிகள் வாலாட்டினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தானுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மும்பையில் ஐஎன்எஸ் கந்தேரி நீர்மூழ்கிக் கப்பலை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், நாம் வளர்ச்சியில் முன்னோக்கி சென்றுகொண்டிருக்கிறோம்.

நம்முடைய அண்டை நாடு நம்மை சீர்குலைக்க விரும்புகிறது. அண்டை நாட்டில் ஆளும் அரசே தீவிரவாதத்தை வளர்த்துவிடுவதும், ஆதரவு அளித்துவருவதும் நமக்கு மிகப்பெரிய சவாலாகும். எந்தவிதமான கடினமான முடிவுகளையும் எடுக்க இந்திய அரசு தயங்காது. உதராணமாக ஜம்முகாஷ்மீரில் 370 பிரிவை நீக்கிய முடிவையும் குறிப்பிடலாம்.

ஜம்மு-காஷ்மீரில் முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை உலகமே ஆதரிப்பதாகவும், ஆனால் பாகிஸ்தானோ ஒவ்வொரு நாட்டுக் கதவையும் தட்டி, கேலிச் சித்திரத்திற்கு ஆளாகிக் கொண்டிருப்பதாகவும் ராஜ்நாத் சிங் விமர்சித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *